கடவுளின் ஒவ்வொரு படைப்பிலும் ஒரு அர்த்தம் உண்டு. பறவைகளுக்கும் பூச்சிகளுக்கும் மட்டுமே பறக்கும் சக்தியை கடவுள் தந்த காரணம் கடவுளுக்கே வெளிச்சம். ஆனால் கடவுள் அந்த சக்தியை தரவில்லை என்பதற்காக வருத்தாமல் பறவைகளால் அடையமுடியாத எல்லைகளுக்கெல்லாம் பறக்க முடிந்தது மனிதனால்.
பறப்பது மட்டுமல்ல புவியை தாண்டி செல்லவும் மனிதன் கற்றுக்கொண்டு விட்டான். எவ்வளவு பெரிய சிறப்பு.
அது சரி. மனிதன் பறக்க ஆரம்பித்த வரலாறு என்ன? மனிதனை பறக்க தூண்டியது எது? பறக்க வண்டிய அவசியம் ஏன் ஏற்பட்டது. ?
பல நூற்றாண்டு காலமாகவே மனிதன் பறக்க நினைத்தாலும் மனிதன் அதற்கான முழு முயற்சியில் இறங்கியது கி.மு 400 இல்.
நமது இந்திய கணித வியலாளரான ஆர்யபட்டர் தனது நூல்களில் பறக்கும் பொருகள் பற்றிய கற்பனை வடிவங்களையும் நுட்பங்களையும் அளித்துள்ளார்.
மாலை நேரத்தில் சிறுவர்கள் வானில் பட்டம் விடும் வழக்கமே மனிதன் பறக்க நினைத்ததற்கு முதல் படியாக இருந்தது. சீனர்கள் பட்டம் பறக்க விடுவதை ஒரு புனித சடங்காகவே பின்பற்றினார்கள். அந்த பட்டங்கள் வானில் பறக்க விடப்படும் பலூன் மற்றும் க்ளைடர் விமானங்களின் முன்னோர்கள்.
பிறகு மனிதன் பறக்கும் முயற்சியில் பறவைகளைப்போல் மரத்தாலான சிறகுகளை பொருத்திக்கொண்டு பறக்க முயற்சித்து மண்டையை உடைத்து கொண்டது தனி விஷயம்.
ஆனால் இந்த தோல்விகள் மனிதனை பின்னைடைய செய்யவில்லை.
கி.பி. 1485 இல் லியானர்டோ டா வின்சி ஆர்நிதொப்ட்டர் (Ornithopter) என்னும் கற்பனை பறக்கும் இயந்திரத்தை வரைந்தார்.
நூற்றுக்கும் மேற்ப்பட்ட பறக்கும் நுட்பங்களை அவர் வரைந்தாலும் எதுவும் இயந்திர வடிவம் பெறவில்லை. ஆனால் இன்றைய ஹெலிகாப்ட்டர் விமானங்கள் இந்த ஆர்நிதொப்ட்டர் நுட்பத்தை பெற்றிருகிறது என்று சொல்லபடுகிறது.
அடுத்த கட்ட பறக்கும் முயற்சி 1783 இல் சூடான காற்றடைத்த பலூன்களில் அரங்கேறியது. ஜோசப் மைக்கேல் மற்றும் ஜாக்வேஸ் எடின்னே மொங்கோல்பியர் சகோரதர்கள் பலூன்களில் சூடான கற்றை அடைத்து அதை பட்டு பைகளில் திணித்தார்கள். ஆடு, கோழி மற்றும் வாத்துகளே உலகின் முதல் பறக்கும் இயந்திர பயணிகள். இந்த பலூன்கள் 6000 அடிக்கு மேல் அவைகளை பறக்க செய்தது.
முதல் மனிதபயணிகள் அதே 1783 இல் பலூனில் பறந்தார்கள்.
18 மற்றும் 19 நூற்றாண்டுகளில் க்ளைடர் விமானங்கள் வடிவமைக்கப்பட்டன. ஜார்ஜ் கயலே மற்றும் ஓட்டோ லிலிந்தால் தத்தம் கலைதேர் விமானகளை உருவாக்கி சோதித்து பார்த்தார்கள். இவையே ஏறோப்ளன்களுக்கு முன்னோடியாம்.
1903 ஆம் ஆண்டு ஒலிவர் மற்றும் வில்பர் ரைட் சகோதரர்கள் கிட்டி ஹாக் (KittyHawk) விமானத்தை வானில் பறக்க விட்டார்கள். 12 குதிரை சக்தியும் 600 பவுண்ட் எடையும் கொண்ட அதை ஒலிவர் ரைட் இயக்கி ஓட்டினார்.
அவரை உலகின் முதல் விமான ஒட்டிஎன்று சொன்னாலும் மிகையில்லை.
இப்பொழுது மனிதன் பறக்க தொடங்கி விட்டான்.
ஒரு விமான உருவாக்கத்தில் முக்கிய பங்கு வகிப்பது நான்கு விஷயங்கள்:
Aerodynamics என்னும் காற்று இயக்கம் சார்ந்த அறிவியல் ஆய்வு : இந்த அறிவே விமானத்தின் உருவத்தையும் அதன் பறக்கும் தன்மையையும் நிர்ணயிக்கும்.
Propulsion என்னும் முன்னோக்கி தள்ளும் வழிமுறை: இது விமான என்ஜின் இயந்திரத்தை இயக்கி அதற்கான் தள்ளு சக்தியை அளித்து விமானம் பறக்கவோ அல்லது தரை இறங்கவோ வழி வகுக்கிறது.
Materials and Structures: அதாவது விமானம் உருவாக தேவையான பொருள்கள் மற்றும் அதன் உருவம். இது விமானம் பறக்கத் தேவையான வஸ்துகள் மற்றும் எந்த விகிதத்தில் எந்த பொருள்களை சேர்க்க வேண்டும் ஆகியன முடிவு செய்வது.
Stability and control: இது விமான ஸ்திர மற்றும் கட்டுபாடுகள் பற்றியான. விமான இயங்க தேவையான காற்றழுத்தம் , உயரம் , திசை, வானிலை ஆகியவை கொண்டது. இதை பொறுத்து விமானி எந்தெந்த உபகரணங்களை கொண்டு இயக்க வேண்டும் என்பனவாகும்.
விமான உருவம் பற்றி:
ஒரு விமானத்தின் முக்கிய பகுதிகள் ஆறு . அவை:
1. விமான எரிபொருள் டாங் . Fuel tank
2. சிறகுகள் Wings
3. வால் பகுதி Tail
4. சுக்கான் Rudder
5. என்ஜின்கள் Engines
6. தரை இறக்கு சக்கரம் Landing Gears
எரிபொருள் டாங்கிகளே விமானத்தின் கணிசமான பகுதியாகும். இதில்தான் பல கட்டுப்பாடு மையங்கள் மற்றும் பயணிகளின் இருக்கைகள் அமைந்திருக்கும்.
சிறகுகள் விமான பறக்க மற்றும் தரை இறங்க உதவி புரியும். கற்று ஐக்கும் திசையில் இந்த சிறகுகள் விமான பறக்க வல்ல செய்யபட்டிரிகிறது. இது விமானத்தின் தரை இரங்கும் வேகம் மற்றும் மேலெழும்பும் வேகம் ஆகியன காற்றை வைத்து முடிவுசெய்யப்படுகிறது.
வால் பகுதியில் திசை மாற தேவையான கட்டுப்பாடு அமைந்திருக்கிறது.
என்ஜின் இயந்திரங்களில் எரிபொருள் நிரப்பட்டு அது சக்தியாக மாறி விமானம் இயங்க தேவையான சக்தியை அளிக்கிறது. என்ஜினை வைத்து விமானம் ஜெட், ப்ரோ பல்லர் , டர்போ ஜெட் , ராகட் என பகுக்கபடுகிறது .
தரையரங்கு சக்கரம் விமான தரை இறங்கும் பொது அதன் இடையை தாங்கி தரை இறங்கு அதிர்ச்சிகளை விழுங்கிக்கொள்கிறது
சில தகவல்கள்:
Black Box எனப்படும் கருப்பு பெட்டி உண்மையில் கருப்பு நிறமல்ல. அவை மஞ்சளாக இருக்கும். கருப்பு பெட்டியில் ஒரு விமானத்தின் ஒட்டு மொத்த கட்டளைகள், சம்பவங்கள் எல்லாம் பதிவாகும். இவை எதிர் கால விபத்துகள் நடக்காமல் எச்சரிக்கையாக இருக்க உதவும்.
பொதுவாக எந்த ஒரு விமானமும் பறக்க அதன் எடை குறைவாக இருக்க வேண்டிய அவசியமுள்ளது. அதனாலேயே அது அலுமினியம் உலோகத்தினால் கட்டபடுகிறது. ஒரு விமானம் மேலெழும்பும் பொது இருக்கும் இடையை விட தரை இரங்கும் பொது வேண்டிய எடை குறைவாகவே இருக்க வேண்டும். இதனாலேயே எரிபொருள் கூட எடையை சேர்த்தால் அவை வானில் கொட்டப்பட்டு விடும்.
கருப்பு பெட்டி செய்யப்படும் உலோகம் கனமானதாகும். எனவே கனமான உலோகத்தினை கொண்டு விமானம் வடிவமைக்க இயலாது. கருப்பு பெட்டி உருக்கு இரும்பால் (steel alloy) செய்யபடுகிறது.
மேலும் உருக்கு இரும்பு மிகவும் விலை அதிகமானது. கட்டுபடியாகாது.
பாதரசம் அலுமினிய உலோகத்தில் சேரும் பொது அலுமினியம் மிகவும் பாதிப்படையும். தவறுதலாக உஷ்ணமானி உடைந்து விட்டால் விமான உட்பகுதியில் மிகவும் சேதத்தை ஏற்படித்தி விடும்.
3. காற்று கொந்தளிப்பு காரணங்கள் யாவை?
சில நேரங்களில் விமானம் கீழிறங்கி பறப்பது போல் இருக்கும். ஒரு வேளை விமானம் விபத்தாகுமோ என்று அஞ்சுவோரும் உண்டு. உண்மையில் அது Turbulence என்னும் காற்று கொந்தளிப்பு.
உண்மையில் விமானம் மேலும் கீழும் இறங்கி ஏறி செல்கிறது. ஆனால் இறங்குவதே பெரும்பாலும் உணரபடுகிறது. கொந்தளிப்பு காற்றோட்டங்கள் அவ்வபோது மாறுபடுகிறது. இந்த மாற்றங்கள் காற்று கொந்தளிப்பு ஏற்படுத்தி விமானத்தை ஆட செய்கிறது.


No comments:
Post a Comment